Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரசிகர்கள் ரகளை: 'டி-20'; தென் ஆப்ரிக்கா தொடரை வென்றது!

புவனேஷ்வர்: தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 2வது 'டி-20' போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

முதல் 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 28 ரன்கள் சேர்த்த நிலையில் ஷிகர் தவான் (11) மோரிஸ் வேகத்தில் வீழ்ந்தார். இதன் பின் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வருவதும் போவதுமாக இருந்தனர். கோஹ்லி (1) ரோகித் சர்மா, இம்முறை 22 ரன்னுக்கு, ரன் அவுட்டாகினர்

ரபாடா சுழலில் அம்பதி ராயுடு 'டக்' அவுட்டானார். கேப்டன் தோனியும் 5 ரன்னுக்கு அவுட்டாகினார். சற்று ஆறுதல் தருவார் என்று நம்பப்பட்ட ரெய்னாவும் (22), இம்ரான் தாகிர் சுழலில் சிக்கினார்.

இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் 17.2 ஓவரில் இழந்து 92 ரன்னுக்கு சுருண்டது.

அதன்பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 11 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 64 ரன் எடுத்திருந்தது. அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள், கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில்களை கொண்டு, களத்தில் எறிந்தனர். இதனால் போட்டி 45 நிமிடம் நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டி துவங்கியதும் பெகர்டியன் (11) அவுட்டானார். அடுத்து வந்த மில்லர் ஒரு சிக்சர் அடிக்க, வெற்றி எளிதானது. தென் ஆப்ரிக்க அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 96 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டுமினி (30), மில்லர் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்த வெற்றியை அடுத்து தென் ஆப்ரிக்க அணி 2-0 என, 'டி-20' தொடரை கைப்பற்றியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close