Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரோகித்தின் 150 ரன்கள் வீண் : கோலி, தோனியால் இந்திய அணி காலி!

கான்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ரோகித் அடித்த 150 ரன்கள் வீணாணது.

டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய குயின்டன் டி காக் 29 ரன்னிலும் ஆம்லா 37 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். அடுத்து ஜோடி சேர்ந்த டுப்லெசி, டி வில்லியர்ஸ் ஜோடி இந்திய பந்துவீச்சை சிதறடித்து ரன்களை குவித்தது.

டுப்லெசி 77 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் உதவியுடன் 77 ரன்கள் அவுட் ஆனார். அதே வேளையில் டி வில்லியர்ஸ் இந்திய பந்துவீச்சை சின்னாபின்னமாக்கினார். கடைசி வரை அவுட்டாமல் இருந்த டி வில்லியர்ஸ்  73 பந்துகளில் டி வில்லியர்ஸ் 104  ரன்களை விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும். கடைசி கட்டத்தில் ஃபெகார்தின்  35 ரன்கள் எடுத்தார். தென்ஆப்ரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் உமேஷ் யாதவ், மிஷ்ரா தலா இரு விக்கெட்டுகளையும் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இந்தியா தரப்பில் ரோகித்தும் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். தொடக்கம் முதலே ரோகித் அதிரடியாக விளையாடினார். தவான் 23 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரஹானே நிதானமாக ஆடினாலும் ரோகிச் சிக்சரும் பவுண்டரிகளாக விளாசினார். இதனால் இந்திய அணி 18 ஓவரில் 100 ரன்களை கடந்தது.

ரஹானே 60 ரன்களில் அவுட் ஆனார். அதே வேளையில் ரோகித் 98 பந்துகளில் சதமடித்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 11 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். சதமடித்த பின்னரும் ரோகித்தின் அதிரடி குறையவில்லை. கடைசியில் 150 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித், இம்ரான் தாகீர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவரது 150 ரன்களில் 13 பவுண்டரிகள் 6 சிக்சர்களும் அடங்கும்.

ரோகித் அவுட் ஆன போது களத்தில் கேப்டன் தோனி இருந்தார். பின்னர் அவருடன் சுரேஷ் ரெய்னா இணைந்தார். அவரும் நிலைக்கவில்லை. தொடர்ந்து தோனியுடன்  பின்னி இணைந்தார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ரபடா பந்துவீசினார். முதல் பந்தில் தோனி 2 ரன் எடுத்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

அடுத்து பின்னி ஒரு ரன் எடுக்க, 4வது பந்தை சந்தித்த தோனி விக்கெட்டை பறிகொடுத்தார். தோனி 31 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 298 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோனி களத்தில் இருந்தால் இந்தியாவுக்கு வெற்றி தேடி தருவார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு வீணாகியது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ