Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யூரோ 2016 : பலம் வாய்ந்த நெதர்லாந்து அணி அதிர்ச்சியுடன் வெளியேற்றம்!

பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெறவில்லை. நேற்று செக் குடியரசு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததையடுத்து, நெதர்லாந்தின் யூரோ கனவு முடிவுக்கு வந்தது.

தகுதி சுற்றில் ' ஏ ' பிரிவில் இடம் பெற்றிருந்த நெதர்லாந்து அணி செக் குடியரசு அணியை எதிர்கொண்டது. இதே பிரிவில் இடம் பெற்றிருந்த துருக்கி அணி மற்றொரு ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியை சந்தித்தது. நெதர்லாந்து அணி 13 புள்ளிகளையும் துருக்கி அணி 15 புள்ளிகளும் பெற்றிருந்தன. 10வது ஆட்டமான நேற்றைய ஆட்டத்தில், நெதர்லாந்து அணி வெற்றி பெற்று துருக்கி அணி தோல்வியடைந்தால் நெதர்லாந்து அணி யூரோவுக்கு முன்னேற வாய்ப்பிருந்தது.
 

ஆனால் ஆம்ஸ்டர்டாமில்  சொந்த மண்ணில் நெதர்லாந்து அணி செக்குடியரசு அணியிடம் 3- 2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டது. நெதர்லாந்து அணியின் முன்கள வீரர் ராபின் வான் பார்சி அடித்த ' சேம்சைட் கோல்'  நெதர்லாந்தின் யூரோ வெளியேற்றத்திற்கு வித்திட்டது. அதே வேளையில் துருக்கி அணி ஐஸ்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால் துருக்கி அணி 18 புள்ளிகளுடன் யூரோ 2016 தொடருக்கு  தகுதி பெற்றது.

யூரோ 2016  கால்பந்து தொடர் அடுத்த ஜுன் 10ஆம் தேதி தொடங்கி ஜுலை 10 ஆம் தேதி வரை பிரான்சில் நடைபெறுகிறது. இதுவரை 16 அணிகள் பங்கேற்று வந்த இந்த  தொடரில் தற்போது முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதற்காக 6 அணிகள் அடங்கிய 8 பிரிவுகள் கொண்ட தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. இதில் ஒவ்வொரு பிரிவிலும்  முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் யூரோ போட்டிக்கு முன்னேற முடியும்.

இதில் 'ஏ' பிரிவில் இருந்து செக் குடியரசு 22 புள்ளிகளுடனும் ஐஸ்லாந்து 20 புள்ளிகளும் துருக்கி 18 புள்ளிகளும் பெற்று முன்னேறின. நெதர்லாந்து அணி 13 புள்ளிகளுடன் யூரோவில் பங்கேற்க முடியாமல் வெளியேறியது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ