Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி!

ந்தூரில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்க அணியை தோற்கடித்து இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. ரோகித்தும், தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோகித், இந்த ஆட்டத்தில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் 21 ரன்களில் வெளியேறினார். அடுத்து 3வது வீரராக களமிறங்கிய ரஹானே, இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அதேவேளையில் துணை கேப்டன் விராட் கோலி, 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். விராட் கோலிக்கு பிறகு களமிறங்கிய தோனி, ரஹானேவுடன் இணைந்து அணியின் ரன்களை உயர்த்த போராடினார். ரஹானே 51 ரன்களில் அவுட் ஆனார். அதற்கு பின் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ஜொலிக்கவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணி 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

அந்த சமயத்தில், கேப்டன் தோனி மட்டுமே நிலைத்து  விளையாடி ரன்களை சேகரித்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கடைசி கட்டத்தில் ஹர்பஜன் சிங், அதிரடியாக விளையாடி ஒரு சிக்சர் 2 பவுண்டரிகள் விளாசி,  22 ரன்கள் எடுத்தார். 

இறுதியில் இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு, 247 ரன்கள் எடுத்தது. தோனி 86 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.

இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி போட்டியின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 225 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ