Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காதலுக்காக தென்ஆப்ரிக்கா அணியில் விளையாடும் இம்ரான் தாகீர்!

தென்ஆப்ரிக்க அணியில் இடம் பெற்று சுழற்பந்து வீச்சில் கலக்கி வரும் இம்ரான் தாகீர், பாகிஸ்தானை சேர்ந்தவர். இந்திய வம்சாவளி பெண்ணை காதலித்து மணந்து கொண்ட இம்ரான் தாகீர், பின்னர் தென்ஆப்ரிக்க அணியில் இடம் பெற்றார்.

கடந்த 1979-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பிறந்த இம்ரான் தாகீருக்கு தற்போது 36 வயதாகிறது.  1998-ம் ஆண்டு பாகிஸ்தான்' ஏ 'அணியில் இடம் பெற்றிருந்த தாகீர், தென்ஆப்ரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அணியில் இடம் பெற்றிருந்தார். அப்போது சுமையா தில்தர் என்ற இந்திய வம்சாவளி பெண்ணை சந்தித்துள்ளார். இருவருக்கும் காதல் மலர்ந்தது.

தொடர்ந்து இம்ரான் தாகீர்  சுமையாவை திருமணம் செய்து கொண்டார்.  பின்னர் தென்ஆப்ரிக்காவில் செட்டில் ஆனார். இந்த தம்பதிக்கு ஜிப்ரான் என்ற ஒரு மகன் உள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு தென்ஆப்ரிக்க அணியில் இம்ரான் தாகீருக்கு இடம் கிடைத்தது. தற்போது வரை 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளையும்,  46 ஒருநாள் போட்டிகளில் 81 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ