Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடரும் தவறான முடிவுகள் – சிக்கலில் இந்திய நடுவர்!

ந்தூரில் நேற்று  நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென்னாப்பரிக்க அணியின் தோல்விக்கு, நேற்றைய போட்டியின் நடுவர்களில் ஒருவரான வினீத் குல்கர்னியின் தவறான முடிவுகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
 

ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும், அந்த அணியின் பெஹர்டியன் நிலைத்து நின்று அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி சென்று கொண்டிருந்தார்.  40 - வது ஓவரில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் அவர் அவுட் ஆனார். பந்து மட்டையில் உரசியாதாக நினைத்து நடுவர் குல்கர்னி அவுட் கொடுத்தார். ஆனால் டி.வி.  ரீப்ளேவில் பந்து  மட்டையில் படாமல் சென்றது உறுதி செய்யப்பட்டது. நடுவரின் இந்த தவறான முடிவு ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

ஏற்கனவே முதலாவது இருபது ஓவர் போட்டியிலும், முதலாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய வீரர்களுக்கு எதிராக தவறான முடிவுகளை அறிவித்து வினீத் குல்கர்னி சர்ச்சையில் சிக்கியிருந்தார். ஒவ்வொரு சர்வேதேச தொடர் முடிவடைந்ததும் அதில் பணியாற்றிய நடுவர்களின் செயல்பாடுகள் குறித்து இரு அணி நிர்வாகமும்  ஐசிசியிடம் அறிக்கை அளிக்க வேண்டும்.

முதல் ஒரு நாள் போட்டி முடிந்த பின்னர் வினீத்தின் இந்த தவறுகள் குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிட இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. இந்த நிலையில்   தென் ஆப்பரிக்க அணிக்கு எதிராகவும் வினீத் நேற்று தவறாக முடிவு அறிவித்ததால் அவருக்கு மேலும் நெருக்கடி முற்றியுள்ளது. எனினும் அந்த அணி நிர்வாகம் புகார் அளிக்கப் போவதாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்திய நடுவரான குல்கர்னி, இது வரை 19 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும், 7 டி20 போட்டிகளிலும்  நடுவராக பணியாற்றி உள்ளார் .
- பிரேம் குமார் எஸ்.கே.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close