Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவசேனா போராட்டம்: ரகசியமாக நடைபெற்ற இந்தியா- பாக். கிரிக்கெட் பேச்சு!

மும்பை: பாகிஸ்தான் உடனான போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து,  சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால், பிசிசிஐ அலுவலகத்தில் ரத்து செய்யப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய பேச்சுவார்த்தை, ஓட்டல் ஒன்றில் ரகசியமாக நடைபெற்றது.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே, பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் டிசம்பர்‍ மற்றும் ஜனவரி மாதங்களில் 5 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடத்த திட்டமிடப்பட்டன. ஆனால் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல் காரணமாக, இந்த தொடருக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியமும் இதுவரை உறுதியான பதில் அளிக்கவில்லை.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற ஷசாங் மனோகர், இந்த தொடர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வரும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார். இதன்படி தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிசுடன் ஆலோசனை நடத்திய பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார்கான், தலைமை செயல் அதிகாரி நஜம் சேத்தி உள்ளிட்டோர் இந்தியாவுக்கு வந்தனர்.

பேச்சுவார்த்தை இன்று நடைபெற இருந்த நிலையில், சிவசேனா தொண்டர்கள் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். அப்போது, பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகரை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

கிரிக்கெட் வாரிய அலுவலகத்திற்குள் நுழைந்த அவர்களை, காவல்துறையினர் வெளியேற்றினர். பாகிஸ்தானுடன் எந்த ஒரு கிரிக்கெட் தொடர்பையும் அனுமதிக்க மாட்டோம் என்று கோஷம் எழுப்பிய சிவசேனா தொண்டர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

ஆனால் அதன்பின்னர் ஷகாரியார்கான் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு ரகசியமாக சென்ற ஷசாங் மனோகர், அங்கு அவருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இன்று இரவு அல்லது நாளை டெல்லியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close