Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவருக்கு சிவசேனா மிரட்டல்!

பாகிஸ்தானை சேர்ந்த, கிரிக்கெட் நடுவர் அலிம் தார் உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டுமென சிவசேனாவினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

மும்பை பி.சி.சி.ஐ தலைமை அலுவலகத்தில்  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சேஷாங் மனோகரை சந்தித்து பேச இருந்தார். இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கிரிக்கெட் தொடர் நடத்துவது இருவரும் பேச இருந்தனர். இவர்களது பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனாவினர் பி.சி.சி.ஐ அலுவலகத்துக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில்தற்போது நடைபெற்று வரும் இந்திய தென்ஆப்ரிக்க  அணிகளுக்கிடையேயான தொடரில், பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் அலிம் தார் பணியாற்றி வருகிறார். மும்பையில் நடைபெறவுள்ள 5வது ஒருநாள் போட்டிக்கு அலிம் தாரும் நடுவராக பணியாற்ற உள்ளார். அவரை இந்தியாவில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென சிவசேனாவினர் எச்சரித்துள்ளனர்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ