Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிறந்த நாளில் ஓய்வை அறிவித்த வீரேந்திர சேவாக்!

ந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் வீரேந்திர சேவாக் இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார். தனது 37வது பிறந்த நாள் தினமான இன்று அவர் ஓய்வு பெற்றுள்ளார்.

கடந்த  2013-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு சேவாக்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஹைதரபாத் நகரில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடியிருந்தார்.

இந்திய அணிக்காக  104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சேவாக், 8 ஆயிரத்து 586 ரன்களை பெற்றுள்ளார்.  அதோடு  சேவாக், 251 ஒருநாள் போட்டிகளில் 15 சதங்கள் உள்பட 8 ஆயிரத்து 273 ரன்களை அடித்துள்ளார். வீரேந்திர சேவாக் ஆப்ஸ்பின்னும் வீசுவார். அந்த வகையில் 136 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

தற்போது துபாயில் நடைபெறவுள்ள மாஸ்டர்ஸ் டி20 போட்டியில் விளையாட சேவாக் முடிவு செய்துள்ளார். அதில் பங்கேற்க வேண்டுமென்றால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இதையடுத்து சேவாக் ஓய்வு முடிவை அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ