Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனது இடத்தை எனக்காக விட்டுக் கொடுத்தார் கங்குலி: உருகிய சேவாக்!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென இருந்த இடத்தை எனக்காக விட்டுக்கொடுத்தவர் கங்குலி என்று மனம் உருகி தெரிவித்துள்ளார் ஓய்வு பெற்றுள்ள சேவாக். 

தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளங்களையும் வெளிநாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்த வீரேந்தர் சேவாக், சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் அறிவிப்பை தொடர்ந்து சேவாக்கின் ஓய்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓய்வு அறிவிப்பிற்கு பின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த சேவாக், சச்சின், டிராவிட், கங்குலி, கும்ளே மற்றும் ஜாகீர் கான் போன்ற வீரர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று கூறினார்.

மேலும் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோர் தனக்கு விளையாட்டில் முன்னுதாரணமாக இருந்தார்கள் என்று கூறிய அவர்,  தான் சந்திக்க பயந்த ஒரே பந்துவீச்சாளர் இலங்கை அணியில் முரளிதரன் மட்டுமே என்று  குறிப்பிட்டுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக 300 ரன்களை கடந்தது, உலகக் கோப்பையை வென்றது, இலங்கை அணிக்கு எதிராக 201 ரன்கள் எடுத்தது, டெஸ்ட் போட்டியில்  281 ரன்களை கடந்தபோது வி.வி.எஸ். லஷ்மண் எழுந்து நின்று கைதட்டியது ஆகியவை தன்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவங்கள் என்று சேவாக் நெகிழ்ந்துள்ளார்.


சவுரவ் கங்குலிக்கு பாராட்டு

“சவுரவ் கங்குலி எனக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவதை விட்டுக் கொடுத்தார். என்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். முழு நம்பிக்கையும் வைத்திருந்தார். உங்களுக்கு மிகுந்த நன்றி சவுரவ்" என்று சேவாக் கூறினார்.

“கிரிக்கெட் என் அன்புக்குரியது, ஓய்விற்கு பிறகும் என்னுடைய வாழ்க்கை கிரிக்கெட்டுடனேயே தொடரும்” என்று கூறிய சேவாக், கமாண்டராகவோ அல்லது ஏதாவது அகாடமியில் பயிற்சியாளராகவோ இருக்க போவதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, தன்னுடன் விளையாடிய அனைத்து சக வீரர்களுக்கும், எல்லா ரசிகர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி என்று சேவாக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close