Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விராட் கோலி சதம்: தென் ஆப்ரிக்காவுக்கு 299 ரன் இலக்கு!

சென்னையில் நடந்து வரும் 4 வது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அபார சதத்தால், இந்திய அணி 299 ரன்களை வெற்றி இலக்காக தென் ஆப்ரிக்கா அணிக்கு நிர்ணயித்துள்ளது. 

இந்திய - தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான 4-வது ஒருநாள் போட்டி,  சென்னையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் ரோகித் 21 ரன்களிலும், ஷிகர் தவான் 7 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.

அடுத்து இணைந்த ரஹானே - விராட் கோலி ஜோடி,  நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. ரஹானே 45 ரன்களில் வெளியேறினார். ஆனால் விராட் கோலி அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார். இவர் 112 பந்துகளில் சதமடித்தார்.

விராட் கோலி சிக்சர் அடித்து, சதம் பூர்த்தி செய்தது ரசிகர்களை பரவசப்படுத்தியது. விராட் கோலியின் 100 ரன்களில் 4 சிக்சர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும். இது விராட் கோலியின் 23-வது சதம் ஆகும். அத்துடன் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் சதமும் கூட.

விராட் கோலிக்கு பக்கபலமாக இருந்த சுரேஷ் ரெய்னா, தனது 36வது அரை சதத்தை நிறைவு செய்தார். 52 பந்தில் 52 ரன் அடித்த ரெய்னா, ஸ்டெய்ன் பந்தில் ஆட்டம் இழந்தார். இவர் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

இவரைத் தொடர்ந்து கேப்டன் தோனி களம் இறங்கினார். கடைசி நேரத்தில் தோனியின் ஆட்டம் ரசிகர்களை வெறுப்படைய வைத்தது. சதம் அடித்த கோலி 138 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ஹர்பஜன் சிங் டக் அவுட் ஆனார். தோனி 15 ரன்னில் வெளியேறினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களம் இறங்க உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ