Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோழியைத் தாக்கிய வழக்கில் கைதாகிறார் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா?

பெங்களூரு: பெங்களூரு  நட்சத்திர விடுதியில், இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா தனது தோழியைத் தாக்கியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நட‌த்திவரும் நிலையில், 7 நாட்களுக்குள் அமித் மிஸ்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் கைது செய்யப்படுவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
 

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா கடந்த செப்டம்பர் 25-ம் தேதி,  பெங்களூரு எம்.ஜி. சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், தனது பெண் தோழி வந்தனாவைச் சந்தித்துள்ளார். அப்போது அமித் மிஸ்ரா, பெண் தோழியை தகாத வார்த்தைகளில் திட்டி, கடுமையாக தாக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அந்தப் பெண் அசோக்நகர் காவல் நிலையத்தில், அமித் மிஸ்ரா பாலியல்ரீதியாக தன்னைத் தாக்கியதாக கடந்த செப்டம்பர் 27-ம் தேதி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அமித் மிஸ்ரா மீது பெண்ணைத் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்னும் 7 நாட்களுக்குள் அசோக்நகர் காவல் நிலையத்தில் அமித் மிஸ்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் நகல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, குறிப்பிட்ட தேதிக்குள் அமித் மிஸ்ரா ஆஜராகாவிட்டால், அவரை கைதுசெய்து விசாரிப்போம் என்றும், சட்டப்படி அமித் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் பெங்களூரு மாநகர (மத்திய) துணை காவல் ஆணையர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

தோழி வந்தனா திடீர் பல்டி

இந்நிலையில், மிஸ்ராவின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணம் கிடையாது என்றும், அவருக்கு அதிகமாக தொல்லை தர விரும்பவில்லை என்றும் வந்தனா திடீரென பல்டி அடித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மிஸ்ராவும் நானும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் சண்டை நடந்திருக்கலாம். இருப்பினும் நட்பு எப்போதும்போல தொடரும். காவல்  நிலையத்துக்கு வந்ததும் சமூகமாக பேசி தீர்த்துக்கொள்வோம். வழக்கை வாபஸ் பெறப்போகிறேன்" என்று கூறியுள்ளார்.

அமித் மிஸ்ரா தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ