Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீனிவாசனுடன் தோனி, சு.சுவாமி அடுத்தடுத்து சந்திப்பு: காரணம் என்ன?

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உச்ச நீதிமன்றம் 2  ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில் ஐசிசி தலைவர் ஸ்ரீனிவாசனை, இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
 

ஐபிஎல் கிரிக்கெட்டில் நடைபெற்ற சூதாட்ட புகாரை தொடர்ந்து பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து ஸ்ரீனிவாசன் விலகினார். இந்நிலையில், ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதித்தது.

இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், "சூதாட்ட குற்றச்சாட்டு காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐ.பி.எல். போட்டியில் கலந்து கொள்ள 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இயற்கை நீதிக்கு எதிரானது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்த அணி மீது நேரடி குற்றச்சாட்டு எதுவும் இல்லை. இந்த அணியில் தலை சிறந்த வீரர்கள் உள்ளனர். 2 ஆண்டுகள் தடை என்பதால் இந்த அணியே மறைந்து விடும். எனவே பொதுநலன் கருதி இந்த அணிக்கான தடையை நீக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில், பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தோனி இன்று  சந்தித்து பேசினார். அப்போது, சென்னை அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஸ்ரீனிவாசனை அவரது இல்லத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் சந்தித்து பேசினார். அவரும் வழக்கு தொடர்பாக பேசியதாக தெரிகிறது.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஸ்ரீனிவாசன் - தோனி- சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ