Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்ரிடிக்கு' இடி'... வாட்சனுக்கு 'குத்து! கிரிக்கெட்டின் நிஜ 'தாதா' கவுதம் காம்பீர்!

ழக்கமாக கால்பந்து போட்டிகளில்தான் வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. ஏனென்றால் அது 'பாடி கான்டக்ட் கேம்'. வீரர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு விளையாடுதால் தள்ளுமுள்ளு ஏற்படுவது கால்பந்து போட்டிகளில் வாடிக்கையானதுதான். 

இதனால் கால்பந்து போட்டிகளில் மோதல் நடந்தால் சகஜமாக எடுத்துக கொள்வார்கள். ஆனால், இப்போது கால்பந்து போன்றே கிரிக்கெட்டும் மாறி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கவுதம் காம்பீர் அனேக வீரர்களிடம் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

சர்வதேச அளவில் பல முன்னணி வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ள, காம்பீர் நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரியை தாக்க முயன்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மோதலை தடுக்க வந்த, நடுவர் ஸ்ரீநாத்தையும் தள்ளிவிட்டார்.

அதோடு 'போட்டி முடிந்ததும் மாலையில் உன்னை அடிக்கிறேன்' என்று கவுதம் காம்பீர் கத்த, அதற்கு 'இப்போதே ஒரு கை பார்த்து விடலாம்' என்று மனோஜ் திவாரி ஆவேசமடைய நேற்று டெல்லி மைதானத்தில் பெரும் களேபரமே ஏற்பட்டது. இதனைப் பார்த்து பதற்றமடைந்த நடுவர் ஸ்ரீநாத் குறுக்கே வர, அவரை கீழே தள்ளினார் காம்பீர்.

ரஞ்சி கோப்பைக்கான போட்டியில் நடந்த இந்தச் சம்பவத்தையடுத்து போட்டி நடுவர் வால்மிக் பக், கவுதம் காம்பீருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 70 சதவீதத்தையும் மனோஜ் திவாரிக்கு 40 சதவீதத்தையும் அபராதமாக விதித்தார். ஆனால் நடுவரை தள்ளி விட்டதற்காக மிகப் பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கவுதம் காம்பீர் போட்டி கட்டணத்தில் 70 சதவீத அபராதத்துடன் தப்பித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனோஜ் திவாரி ஐ.பி.எல். சீசனில் 2008மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் டெல்லி அணிக்காக விளையாடினார். தொடர்ந்து 2010 முதல் 3 ஆண்டுகள் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். இந்த சமயத்தில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த காம்பீருடன் கருத்து வேறுபாடு இருந்திருக்கும் போலத் தெரிகிறது. அந்த பகைமைதான் இப்போது வெளிப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. ஐ.பி.எல். போட்டிகளில் விளைவுதான் களத்தில் இதுபோன்ற பகை உணர்வை ஏற்படுத்துவதான  இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் பிஷன் சிங் பேடியும் கருத்து தெரிவித்துள்ளார்.

காம்பீர் எதிரணி வீரர்களிடம் இதுபோன்று பலமுறை மோதலில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அப்ரிடியுடன் காம்பீர் மோதலில் ஈடுபட்டார். பின்னர் ரன்னுக்கு ஓடும் போது, அப்ரிடியை முழங்கையால் இடித்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

கடந்த 2008-ம் ஆண்டு  இந்தியாவுடன் ஆஸ்திரேலிய அணி டெல்லியில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. இந்தப் போட்டியின்போது, வாட்சனுடன் தகராறு செய்த காம்பீர், அவரை முழங்கையால் குத்தினார். கவுதம் காம்பீருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு கொல்கத்தா, பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் விக்கெட்டைப் பறிகொடுத்த விராட் கோலியைப் பார்த்து காம்பீர் ஏதோ சொல்ல, அவரும் இவரை நோக்கி வர மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சக வீரர்கள் இருவரையும் பிரித்துவிட்டனர்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ