Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தென்ஆப்ரிக்காவிடம் தொடரை இழந்தாலும் இந்திய அணிக்கு பின்னடைவு இல்லை!

தென்ஆப்ரிக்க அணியிடம் ஒருநாள் போட்டித் தொடரை இழந்த போதிலும் இந்திய அணிக்கு  ஒருநாள் போட்டி தரவரிசையில் பின்னடைவு ஏற்படவில்லை.

ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணி 127 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,  இந்திய அணி 114 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன. தென்ஆப்ரிக்க அணி 112 புள்ளிகள் பெற்று 3வது இடத்தை பெற்றுள்ளது.

பேட்ஸ்மேன்கள் வரிசையில் தென்ஆப்ரிக்க கேப்டன்  டி வில்லியர்ஸ் 900 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். விராட் கோலி 804 புள்ளிகள் பெற்றுள்ளார். வில்லியம்சன் 788 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில்  மிட்செல் ஸ்டார்க் 713 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். சுனில் நரீன் 709 புள்ளிகளை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரர் அஸ்வின் 640 புள்ளிகளுடன் 10வது இடத்தில் இருக்கிறார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ