Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஃப்ரிடி ரூ.50 லட்சம் நிதியுதவி!

பெஷாவர்: பாகிஸ்தானில் நிலநடுக்கம் பாதித்த பெஷாவர் பகுதிக்கு சென்ற கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

பாகிஸ்தானில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட பெஷாவருக்கு இன்று சென்ற கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கிய அஃப்ரிடி, மற்ற கிரிக்கெட் வீரர்களும் உதவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ