Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: நடிகர் ஷாருக்கானுக்கு சம்மன்!

புதுடெல்லி: கொல்கத்தா ரைடர்ஸ் அணியின் பங்குகளை விற்றபோது அந்நிய செலாவணி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்,  நடிகர் ஷாருக்கானுக்கு 3-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக நடிகர் ஷாருக்கான், நடிகை ஜூகி சாவ்லா மற்றும் அவரது கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு மொரீசியஸ் நாட்டு கம்பெனியான சீ ஐலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் என்ற நிறுவனத்துக்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டது. குறைந்த மதிப்பீட்டில் பங்குகள் விற்கப்பட்டதால், இதில் அந்நிய செலாவணி சட்டத்தை மீறி ரூ.100 கோடி கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இதையடுத்து, கடந்த மே மாதம் பங்குதாரர்களான ஜூகி சாவ்லா, ஜெய்மேத்தா ஆகியோரிடம் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதேபோல், நடிகர் ஷாருக்கானுக்கும் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அவர் இதுவரை ஆஜராகவில்லை.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கானுக்கு இன்று 3-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதில், நவம்பர் முதல் வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ