Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹர்பஜன் சிங்குக்கு இன்று திருமணம்: தோழி கீதா பஸ்ராவை கரம் பிடிக்கிறார்!

ந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு இன்று திருமணம் நடைபெறுகிறது. அவர் தனது நீண்ட நாள் தோழியான கீதா பஸ்ராவை கரம் பிடிக்கிறார்.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

ஹர்பஜன் சிங் நீண்ட காலமாக பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவை காதலித்து வந்தார். இவர்களுக்கு திருமணம் செய்ய இரு வீட்டாரும் சம்மதித்தனர். நேற்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தரில் ஹர்பஜன் சிங்- கீதா பஸ்ரா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று திருமணம் நடைபெறுகிறது.

தொடர்ந்து நவம்பர் 1-ம் தேதி டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உள்ளிட்ட ஏராளமான வி.ஐ.பி.க்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருணம் குறித்து மணமகள் கீதா பஸ்ரா கூறுகையில்,  “எங்களை பற்றி நிறைய வதந்திகள் வந்தது. அதுதான் எங்களுக்கு வருத்தமாக இருந்தது. நாங்கள் எந்த முடிவும் எடுக்காதபோது, எப்படி கூற முடியும்?  இப்போது அந்த நாள் வந்துவிட்டது” என்றார்.

- சூலூர் சுதாகர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close