Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

113 வகையான பாக்குவகைகளை பரிமாறியதாக ஹர்பஜன் மீது போலீசில் புகார்!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் திருமணம் கடந்த ஒரு வார காலமாக ஜலந்தரில் களை கட்டி வருகிறது. ஏற்கனவே அவரது திருமண நிகழ்ச்சியின் போது, செய்தியாளர்களை  பாதுகாவலர்கள் சிலர் தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஹர்பஜன் செய்தியாளர்களிடம் மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் ஹர்பஜன் திருமணத்தை வைத்து, மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அவரது திருமண விருந்தின் போது 113 வகையான பாக்குகளை விருந்தினர்களுக்கு பரிமாறியதாக  சீக்கிய அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து சீக்கிய மதத்தின் உயரிய குழுவான அகால் தக்த்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சீக்கிய மத சம்பிராயதப்படி, புனித நிகழ்வுகளின் போது, பாக்கு வகைகள் பரிமாறப்படக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹர்பஜன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண சடங்குகள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்றது. டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் இன்று விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close