Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடுவர்களை துரத்திய குரங்குகள்; கால்பந்து போட்டி ரத்து!

கொல்கத்தாவில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, கார்தா மைதானத்தில் மேற்கு வங்க பிரீமியர் டிவிஷன்' பி' பிரிவு போட்டிகள் நேற்று நடைபெற்று கொண்டிருந்தன. யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன், ரயில்வே அணி வீரர்கள் களமிறங்க தயாரகிக் கொண்டிருந்தனர்.  போட்டி மதியம் 2.15 மணியளவில் தொடங்குவதாக இருந்து.
 

போட்டி தொடங்குவதற்கு சற்று முன், 4 லங்கூர் குரங்குள் கால்பந்து மைதானத்திற்குள் புகுந்தன. அவற்றை போட்டி அமைப்பாளர்கள் துரத்தியுள்ளனர். தொடர்ந்து  போட்டித் தொடங்கியுள்ளது. இரு அணியினரும் தலா ஒரு கோல் அடித்திருந்தபோது, மீண்டும் மைதானத்திற்குள் புகுந்த குரங்குகள் பந்தை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளன. நடுவர்களையும் துரத்தியுள்ளன.  எவ்வளவோ முயற்சித்தும் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து நடுவர்கள் ஆட்டத்தை கைவிட்டனர். இந்த இரு அணிகளுக்கிடையேயான போட்டியை மீண்டும் மற்றொரு இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில், யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த பிஜ்வாஜித் சர்தார் என்ற 19 வயது கால்பந்து வீரரை, குரங்குகள் துரத்தி துரத்தி கடித்தன. இதில் பலத்த காயமடைந்த அவரால், 3 மாதங்கள் விளையாட முடியாமல் போனது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close