Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளாக்மெயில் வழக்கில் ரியல்மாட்ரிட் வீரர் கரிம் பென்ஜமா கைது!

பிரான்ஸ்  கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர்கள் கரீம் பென்ஜமா மற்றும்  மத்தீயோ வல்புனா. தற்போது பென்ஜமா, ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். பிரெஞ்சு லீக் அணியான லியோன் அணிக்காக வல்புனா விளையாடுகிறார். இதற்கு முன் கரீம் பென்ஜமாவும், லியோன் அணிக்காக விளையாடியுள்ளார். அப்போதிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள்.

இந்நிலையில், வல்புனா தொடர்புடைய  'செக்ஸ் டேப் ' ஒன்று கரீம் பென்ஜமாவிடம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனை வைத்து வல்புனாவை, கரீம் பென்ஜமாவும் மார்செலி அணிக்காக விளையாடிய சிஸ்சேவும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கேட்கும் தொகை தரப்படவில்லையென்றால், சம்பந்தப்பட்ட செக்ஸ் டேப்பை  மீடியாக்களிடம் கசிய விட்டுவிடப் போவதாக கரீம் பென்ஜமா மிரட்டியதாக,  பாரீஸ் நகர போலீசில் கடந்த ஜுலை மாதத்தில் வல்புனா  புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரெஞ்ச் போலீஸ்,  கரீம் பென்ஜமாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. பாரீஸ் அருகில் உள்ள வெர்செலிஸ் காவல் நிலையத்தில், கரீம் பென்ஜமா இன்று ஆஜரனார். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸ், கரீம் பென்ஜமாவை உடனடியாக கைது செய்ததாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில், இந்த விவகாரம் தொடர்பாக  சிஸ்சேவிடம்  பிரெஞ்சு போலீஸ் விசாரணை நடத்தியது. ஆனால் அவர் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close