Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தவானும் விராட்டும் ஏமாற்றினர் : இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து திணறல்!

ந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான மொகாலியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன் எடுத்தது.

மொகாலி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முரளி விஜயும், ஷிகர் தவானும் தொடக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். ஆனால் ஷிகர் தவான், பிலாண்டர் பந்தில் ஆம்லாவிடம் பிடிகொடுத்து டக் அவுட் ஆனார்.

அடுத்து சேட்டேஷ்வர் புஜரா முரளி விஜயுடன் இணைந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியது. எனினும் 31 ரன்கள் எடுத்த நிலையில் புஜரா , எல்கர் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த கேப்டன் விராட்கோலி ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். கோலி ரபாடா பந்தில் எல்கரிடம் பிடிகொடுத்தார். பின்னர் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இறுதியில் இந்திய அணி 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய தென்ஆப்ரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு  28 ரன்களை எடுத்துள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close