Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொகாலி டெஸ்ட்: பிற்பகுதியில் இறுக்கிப் பிடித்த இந்தியா! - நச்சுனு நாலு பாயின்ட்ஸ்

ந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலி மைதானத்தில் இன்று (5-ம் தேதி) தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, மொகாலி பிட்சில் முதல் இரண்டு நாட்கள் வரை பேட்டிங்குக்கு சாதகமாக மைதானம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் ஃபார்மில் இருக்கும் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பளிக்க்கப்படவில்லை. தென்னாப்பிரிக்க அணியில் காயம் காரணமாக சீனியர் வீரர்களான மோர்னே மோர்கல், டுமினி இடம்பெறவில்லை.

இன்றைய தினம் பிட்ச் பெரிதும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. எனவே, பேட்ஸ்மேன்களால் ரன் குவிப்பில் ஈடுபடமுடியவில்லை. இரு அணிகளிலும் பந்து வீச்சாளர்களே இன்றைய தினம் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய அணி 68 ஓவர்களில், வெறும் 201 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில், இரண்டு விக்கெட்டுகளை இழந்து  திணறித்திணறி 28 ரன்களை சேர்த்திருக்கிறது.

நாளைய தினம் அஸ்வின், ஜடேஜா இணை கலக்கி, தென்னாப்பிரிக்க அணியை 150 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தால் மட்டுமே இந்த டெஸ்ட்டில், இந்திய அணி கை மேலோங்கும். அதே அம்லா, டுவில்லியர்ஸ் இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டால் இந்திய அணியின் பாடு திண்டாட்டம்தான்.நச்சுனு நாலு பாயின்ட்ஸ்:

1. ரஞ்சியில் அபாரமாக விளையாடி அணியில் மீண்டும் இடம்பிடித்த  ரவீந்தர ஜடேஜா இன்றைய தினம் அருமையாக விளையாடினார். இக்கட்டான சமயத்தில் 38 ரன்களை சேர்த்தார். ஜடேஜாதான் இன்று இந்தியாவின் இரண்டாவது டாப் ஸ்கோரர். ஜடேஜா பந்துவீச்சிலும் இன்று ஜொலித்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே டு பிளைசிஸை டக் அவுட் ஆக்கினார்!

2. கேப்டன் கோலிக்கு இன்று பிறந்தநாள். அணி தடுமாறிய நிலையில் களமிறங்கிய விராட் கோலி, இன்று நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிமுக போட்டியில் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை பந்து வீச்சாளரான ககிசோ ராபாடாவின் சாதாரணமான ஒரு பந்தில் ஸ்டிரைட் டிரைவ் ஆட முயற்சிக்க, பந்து எட்ஜ் ஆகி எல்கர் கையில் தஞ்சமடைந்தது. கடும் ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார் கோலி.

3. டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த தொடக்கவீரர்களில் ஒருவராக மாறி வருகிறார் தமிழக வீரர் முரளி விஜய். முதல் நாளிலேயே பிட்சில் பந்து நன்றாக சுழல்வதால் மற்ற இந்திய  பேட்ஸ்மேன்கள் தடுமாறினாலும், தனக்கே உரிய பாணியில் பொறுமையாகவும், பவுண்டரி தட்ட ஏதுவான பந்துகளை தட்டிவிட்டும் 136 பந்துகளில் 12 பவுண்டரிகள் உதவியுடன் 75 ரன்களை குவித்தார் முரளி விஜய். நம்பிக்கை நாயகன்!

4. ஸ்டெயின் ஓரளவு சிறப்பாக வீசினாலும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை. அதேசமயம் தென் ஆப்பிரிக்காவின் பகுதி நேர பந்துவீச்சாளர் எல்கர்,  எட்டு ஓவர்களை வீசி 22 ரன்கள் மட்டும் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை அள்ளினார். இதுதான் டெஸ்ட் போட்டியில் எல்கரின் சிறந்த பந்துவீச்சு.

ஆக, முதல் நாளின் முற்பகுதியில் சொதப்பினாலும், பிற்பகுதியில் இறுக்கிப் பிடித்திருக்கிறது இந்தியா. நாளையும் பிடியைத் தவறவிடாமல் இருந்தால், ஜெயம் நமக்கே!

-பு.விவேக் ஆனந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

மீன்களில் எது ருசியானது... தெரிஞ்சுக்கலாமா?