Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தென்ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 184 ரன்னுக்கு ஆல்அவுட்!

மொகாலி டெஸ்ட் போட்டியில் தென்ஆப்ரிக்க அணி 184 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்திய தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில்201 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

தொடர்ந்து தென்ஆப்ரிக்க அணி பேட்டிங் தொடங்கியது. தொடக்க வீரர்கள் வான் சில் 5 ரன்னிலும், எல்கர் 37 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்து இறங்கிய டுப்லெசிஸ் டக்அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஹாசிம் ஆம்லா 43 ரன்னும் டி வில்லியர்ஸ் 63 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தென்ஆப்ரிக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் தென்ஆப்ரிக்க அணி 184 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
 

இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வான் சில், எல்கர், டுப்லெசிஸ், டி.ஜே.விலாஸ், இம்ரான் தாகீர் ஆகியோர் அஸ்வின் சுழலுக்கு காலியானார்கள்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களில் தவான் மீண்டும் டக்அவுட்டாகி ஏமாற்றமளித்தார். பிலாண்டர் பந்தில் டி வில்லியர்சிடம் பிடி கொடுத்து தவான் வெளியேறினார். அடுத்து புஜாரா, களமிறங்கினார். முரளி விஜயும் புஜாராவும் இணைந்து தென்ஆப்ரிக்க பந்துவீச்சை சமாளித்து ரன்களை சேகரித்து வருகின்றனர். முரளி விஜய் 34 ரன்களுடனும் புஜாரா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

 

எடிட்டர் சாய்ஸ்