Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குறைந்த போட்டியில் 150 விக்கெட்: இந்திய வீரர் அஸ்வின் சாதனை!

மொஹாலியில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்,  5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தமிழக வீரர் அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இன்னிங்சில் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி, முதல் இன்னிங்சில் 184 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்த இன்னிங்சில் அஸ்வின்  அபாரமாக விளையாடி எல்கார், வான் ஸில், ஆம்லா, டேன் விலாஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தனது 29-வது டெஸ்ட் போட்டியில், 53-வது இன்னிங்ஸில், அஸ்வின் 150-வது விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார்.

முன்னதாக பிரசன்னா 34 டெஸ்ட் போட்டிகளிலும், அனில் கும்ளே 34 டெஸ்ட் போட்டிகளிலும், ஹர்பஜன் சிங் 35 டெஸ்ட் போட்டிகளிலும், சந்திரசேகர் 36 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி 150  விக்கெட்டுகளை எட்டியுள்ளனர்.

உலக அளவில் இங்கிலாந்து பவுலர் பார்ன்ஸ் 24 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 2-வது இடத்தில் வக்கார் யூனிஸ் 27 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க பவுலர் டேய்பீல்ட், இயன் போத்தம், டேல் ஸ்டெய்ன், சயீத் அஜ்மல் ஆகியோருடன் தற்போது அஸ்வின் 29 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

மேலும் 13-வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள அஸ்வின், 4 முறை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்