Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யார்கிட்ட...செல்போனை திருடிய நபரை விரட்டி பிடித்த செரீனா !

லகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ்,  காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை சான்பிரான்சிஸ்கோ  நகரில் உள்ள சீன உணவகம் ஒன்றில், தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டே  உணவருந்திக் கொண்டிருந்தார்.

          

அப்போது செரீனாவின் மேஜை அருகே வந்த நபர் ஒருவர், அவரது மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்து விட்டு சென்று விட்டார்.  சில வினாடிகள் கழித்து தனது மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்போனை காணாமல் போனதை கவனித்த செரீனா, அவரை பின்னாடியே விரட்டி சென்று செல்போனை திரும்ப கேட்டு வாங்கி விட்டார். அப்போது தெரியாமல் எடுத்து வந்துவிட்டீர்களா? என்றும் செரீனா அந்த நபரிடம் கேட்டார்.

பின்னர் செல்போனுடன்  மீண்டும் உணவகம் திரும்பிய அவருக்கு, உணவகத்தில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.  இந்த சம்பவத்தை,  சூப்பர் கேர்ள் உடை அணிந்து செரீனா ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். பெண்கள் என்பதால் எதற்கும் பயப்பட வேண்டாம் என்றும், உங்களது பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் செரீனா அதில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கவில்லை. எனினும் செரீனா புகார் அளிக்க வேண்டுமென சான்பிரான்சிஸ்கோ நகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ