Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தென்ஆப்ரிக்கா வீழ்ந்தது: இந்திய மண்ணில் கேப்டன் கோலிக்கு தொடக்கமே வெற்றி!

மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய - தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி,  மொகாலியில் நடைபெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் தொடங்கியது. தொடக்க வீரர்கள் வான் சில் 5 ரன்னிலும், எல்கர் 37 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்து இறங்கிய டுப்லெசிஸ் டக்அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஹாசிம் ஆம்லா 43 ரன்களும், டி வில்லியர்ஸ் 63 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தென்ஆப்ரிக்க வீரர்கள்,  ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் தென் ஆப்ரிக்க அணி 184 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
 
இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வான் சில், எல்கர், டுப்லெசிஸ், டி.ஜே.விலாஸ், இம்ரான் தாகீர் ஆகியோர் அஸ்வின் சுழலுக்கு காலியானார்கள்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களில், தவான் மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். பிலாண்டர் பந்தில், டி வில்லியர்சிடம் பிடி கொடுத்து தவான் வெளியேறினார். அடுத்து புஜாரா, களமிறங்கினார். முரளி விஜயும், புஜாராவும் இணைந்து தென்ஆப்ரிக்க பந்துவீச்சை சமாளித்து, ரன் சேகரித்தனர். முரளி விஜய் 47 ரன்களும், புஜாரா 77 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்தவர்களில் விராட் கோலி மட்டுமே அதிகபட்சமாக 29  ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.  இந்திய அணி 200  ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் தென்ஆப்ரிக்க அணி 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் இந்திய சுழற்பந்தை சமாளிக்க முடியாமல், தொடக்கத்தில் இருந்தே தென் ஆப்ரிக்க வீரர்கள் விக்கெட்டை பறிகொடுக்கத் தொடங்கினர். பிலாண்டர், டுப்லெசிஸ் தலா ஒரு ரன்னில் அவுட் ஆனார்கள். ஹாசிம் ஆம்லா டக் அவுட் ஆனார்.

தொடக்க வீரராக களமிறங்கிய எல்கருடன் இணைந்து, டி வில்லியர்ஸ் இன்னிங்சை கட்டமைக்க முயன்றார். ஆனால் டி வில்லியர்சை மிஸ்ரா கிளீன் போல்டாக்கினார். பின்னர் களமிறங்கிய தென்ஆப்ரிக்க வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இந்திய அணி, 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் இரண்டாவது இன்னிங்சில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும்  மிஸ்ரா  ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close