Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த விஷபாம்பு ; அதிர்ச்சியில் ரஞ்சி வீரர்கள்

கொல்கத்தாவில் மேற்கு வங்க மற்றும் விதர்பா அணிகளுக்கிடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜே.யு சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 2வது நாளான  இன்று,  விதர்பா அணி வீரர்கள் பீல்டிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பந்துவீச்சாளர் ஸ்வான்பில் பண்டிவார் பந்து வீசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிரே பாம்பு ஒன்று  ஊர்ந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து மைதான பராமரிப்பாளர்கள் கம்பு கட்டையுடன் ஓடி வந்து பாம்பை அடிக்க முற்பட்டனர். ஆனால் அந்த பாம்பு அவர்களுக்க டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓடி விட்டது.

பாம்பு மைதானத்தை விட்டு வெளியேறிய பின்னர், சில நேரம் கழித்து போட்டி மீண்டும் தொடங்கியது. இருந்தாலும் விதர்பா அணி விரர்கள் ஒருவித அச்சத்துடன்தான் பீல்டிங்கில் ஈடுபட்டனர்.

மைதானத்திற்குள் புகுந்த பாம்பு கொடிய விஷமுள்ள விரியன் அல்லது நாக வகையை சேர்ந்தாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மைதானத்திற்குள் புகுந்த பாம்பு நேரே பிட்சை நோக்கிதான் வந்துள்ளது. பந்து வீச வந்த பண்டிவார் அதனை பார்த்ததால்தான், தப்பித்தார். ஒருவேளை அதனை பார்க்காமல் அவர் நடந்து வந்திருந்தால் கண்டிப்பாக அதனை மிதித்திருப்பார். பாம்பு தீண்யிருக்க வாய்ப்பிருந்திருப்பதாக சக வீரர்கள் கூறுகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ