Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீநிவாசனை நீக்க முடிவு : ஐ.சி.சி. தலைவராகிறார் ஷஷாங்க் மனோகர்?

ஐ.சி.சி. சேர்மன் பதவியில் இருந்து ஸ்ரீநிவாசனை நீக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது. அவருக்கு பதிலாக தற்போதைய பி.சி.சி.ஐ. தலைவர் ஷஷாங்க் மனோகரை பரிந்துரைக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மும்பையில் நடந்த, பி.சி.சி.ஐ-யின் 85-வது ஆண்டிறுதி  பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஐ.சி.சி. தலைவராக இருக்கும் ஸ்ரீநிவாசனின் பதவி நீக்கம் குறித்து முக்கிய விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஸ்ரீநிவாசனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜுன் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால் அதுவரை கூட ஸ்ரீநிவாசனை பதவியில் வைத்திருக்க பி.சி.சி.ஐ விரும்பவில்லை. வரும் 2016-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடைபெறும் ஐ.சி.சி. பொதுக்குழுக் கூட்டத்தில், மற்றொரு நாட்டு கிரிக்கெட் வாரியம் பரிந்துரைக்கும் நபர் ஐ.சி.சியின் புதியத் தலைவராக நியமிக்கப்படுவார்.

ஐ.பி.எல். அணியில் உரிமையாளராக இருப்பவர்கள், பி.சி.சி.ஐ.யில் பதவி வகிக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி,  பி.சி.சி.ஐ தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீநிவாசன் விலகினார். இதையடுத்து ஷஷாங்க் மனோகர் 2-வது முறையாக பி.சி.சி.ஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ