Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் எவ்வளவு?

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தோனி, விராட்கோலி, அஸ்வின்,ரஹானே ஆகியோருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 

இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் முடிவில், 2015-16-ம் ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. மொத்தம் 26 வீரர்கள் வழக்கம் போல் ஏ, பி, சி என்று 3 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி கடந்த ஆண்டு ‘ஏ’ கிரேடில் இடம் பிடித்து இருந்த சுரேஷ்ரெய்னா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் ‘பி’ கிரேடுக்கு தரம் இறக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ‘பி’ கிரேடில் இருந்த ரஹானே ‘ஏ’ கிரேடுக்கு முன்னேறி இருக்கிறார். கடந்த ஆண்டில் ‘பி’ கிரேடு பிரிவில் இடம் பெற்ற ரவீந்திர ஜடேஜா ‘சி’ கிரேடுக்கு வந்துள்ளார்.

புதிய சம்பள ஒப்பந்தத்தில் தோனி, விராட்கோலி, அஸ்வின் ஆகியோர் ‘ஏ’ கிரேடில் தொடருகின்றனர். அந்த பிரிவில் ரஹானே புதிதாக இடம் பிடித்து இருக்கிறார். அம்பத்தி ராயுடு, ரோகித்சர்மா, முரளி விஜய், ஷிகர் தவான், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, புஜாரா, முகமது ஷமி ஆகியோர் ‘பி’ கிரேடில் நீடிக்கின்றனர். இந்த ஆண்டில் அணிக்கு மீண்டும் திரும்பிய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் ‘சி’ கிரேடில் இடம் பிடித்துள்ளார். ஸ்ரீநாத் அரவிந்த் ‘சி’ கிரேடில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் ‘பி’ கிரேடில் இடம் பெற்ற பிரக்யான் ஓஜா, ‘சி’ கிரேடில் இருந்த பங்கஜ்சிங், வினய்குமார், பர்வேஸ் ரசூல், மனோஜ்திவாரி, ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு புதிய ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை. ‘சி’ கிரேடில் அமித் மிஸ்ரா, அக்ஷர் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி, விருத்திமான் சஹா, மொகித் ஷர்மா, வருண் ஆரோன், கரண்ஷர்மா ரவீந்திர ஜடேஜா, லோகேஷ் ராகுல், தவால் குல்கர்னி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

‘ஏ’ கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியும், ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.5 லட்சமும், ஒரு ஒருநாள் போட்டிக்கு ரூ.3 லட்சமும் கட்டணமாக கிடைக்கும். ‘பி’ கிரேடு வீரர்களுக்கு ரூ.50 லட்சமும், டெஸ்ட் போட்டிக்கு ரூ.3 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.1.75 லட்சமும் கட்டணமாக கிட்டும். ‘சி’ கிரேடு வீரர்களுக்கு ரூ.25 லட்சமும், டெஸ்ட் போட்டிக்கு ரூ.1.50 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.1 லட்சமும் கட்டணமாக கிடைக்கும்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ