Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சொந்த உபயோகத்துக்காக குட்டி விமானம் வாங்கிய ரொனால்டோ !

லகின் பணக்காரக கால்பந்து வீரராக கருதப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சொந்த உபயோகத்துக்காக 19 மில்லியன் யூரோ விலையில் குட்டி விமானம் வாங்கியுள்ளார். 

கால்பந்து விளையாட்டுத் தவிர விளம்பரங்களிலும் ரொனால்டோ நடித்து வருகிறார். தற்போது அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமும் வெளியியாகவுள்ளது. இது தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்வது வழக்கம்.
 

தற்போது அதற்காக  'கல்ப்ஸ்ட்ரீம் ஜி200' ரக   விமானம் ஒன்றை 19 மில்லியன் யூரோ கொடுத்து ரொனால்டோ விலைக்கு வாங்கியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இரட்டை என்ஜீன் கொண்ட இந்த விமானத்தில் 8 முதல் 10 பேர் செல்ல முடியும். பல்வேறு நவீன வசதிகளும் இந்த விமானத்தில் உள்ளது.

தற்போது ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த சீசன் முடிந்தவுடன் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணியில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

உலகத்திலேயே கால்பந்து விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் வரிசையில் ரொனால்டோவுக்குதான் முதலிடம். இவரது ஆண்டுவருமானம் ரூ.380 கோடிக்கும் மேல்.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ