Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தென்ஆப்ரிக்க அணி 214 ரன்களில் ஆல் அவுட்!

பெங்களூருவில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் தென்ஆப்ரிக்க அணி 214  ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, தென்ஆப்ரிக்க அணியை முதலில் பேட் செய்யக் கேட்டுக் கொண்டார். தொடக்க வீரர்கள் வான்சில் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து எல்கருடன் இணைந்த டுப்லெசி டக்அவுட் ஆனார். தொடர்ந்து கேப்டன் ஆம்லா 7 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் எல்கரும் டி வில்லியர்சும் இணைந்து  ரன்களை அதிகரிக்க முயன்றனர். எல்கர் 38 ரன்களில் அவுட்டாகி விட, டி வில்லியர்ஸ் மட்டுமே இந்திய பந்துவீச்சை தாக்குபிடித்து ரன்களை சேகரித்தார். டுமினி , விலாஸ் தலா 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள்.

105 பந்துகளை சந்தித்த  டி வில்லியர்ஸ் 85 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 11 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். இறுதியில் தென்ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 214 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.




 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ