Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த 11 காரணங்களுக்காகவே.. ஆல்ஸ்டார்ஸ் கிரிக்கெட் அடிக்கடி நடக்கணும்!

1. 30 ஸ்டார்கள்!

கிட்டத்தட்ட இன்றைய தலைமுறை கிரிக்கெட் பார்க்க துவங்கிய நாட்களில் கிரிக்கெட்டில் கில்லிகள் என்றால் இவர்கள் தான் என கூறப்பட்ட 30 பேர்களும் ஒரே அணியில் என்ற செய்தியே போதும் இந்த போட்டியை ரசிக்க. அதனை தாண்டி ஐபிஎல், பிக் பேஷ் போட்டிகளில் வெளிநாட்டு வீரர் இந்திய வீரருக்கு பந்து வீசுவது. வார்னே பந்தில் சச்சின் சிக்ஸ் அடிப்பது என்பதை பார்த்திருந்தாலும். லாரா, ஆம்ப்ரோஸ், வால்ஷ் போன்ற வீரர்களின் க்ளாஸிக் ஆட்டத்தை மீண்டும் பார்ப்பது டைம் மிஷின் ட்ரீட் தான்!


2.சச்சின் - கங்குலி - சேவாக்

சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி மூன்று ஆட்டங்களில் தோற்றிருந்தாலும் சச்சிந்சேவக்-கங்குலி மூன்று வீரர்கள் ஒன்றாக இணைந்து ஆடுவதை காண யாருக்கு தான் ஆசை இருக்காது. உலகின் தலை சிறந்த ஒப்பனர்கள் என பெயர் வாங்கிய சச்சின் - கங்குலி  இணைந்து ஆடுவதை பார்த்த பலர் சமூக வலை தளங்களில் Our Childhood was Awesome என்ற வாக்கியங்களோடு இந்த இணை ஆடுவதை நான் மீண்டும் பார்த்து விட்டேன். 8வது அதியசத்தை பார்த்து கொண்டிருக்கிறோம் என உருகினர். அதேபோல் சச்சின் - சேவாக் 5 ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் குவித்து தெறிக்க விட்டதில் அமெரிக்காவே அதிர்ந்து போனது.

 

Ganguly - SIX!!! Over Long Off. Sachin Blasters 37/1 in 4 Overs.

Posted by Cricket All Stars on 11 November 2015


3.வார்னே - வெட்டோரி!

 ஆஸ்திரேலிய கண்டத்தில் ஆல் டைம் ஸ்டார்ஸான வார்னே - வெட்டோரி ஒரே அணியில் இருவரும் எதிரெதிர் முனையில் பந்து வீச எதிரணியை கலங்க வைப்பதை பார்ப்பதும், இவர்கள் இருவரும் ஏன் அவசரப்பட்டு ஓய்வு பெற்றார்கள் என்று நினைக்க வைக்கும் அளவுக்கு அவர்களது ஆட்டமும் இருந்தது. இந்த தொடரின் கடைசி போட்டியில் வெற்றி ரன்களை சிக்சர் அடித்து வார்னே முடிக்கும் போது மனுஷன் இன்னும் ரெண்டு வருஷம் ஆடி இருந்திருக்கலாம்னு தான் பலர் நினைச்சிருப்பாங்க.

4.ஆம்ப்ரோஸ் ஹேர் ஸ்டைல்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆம்ப்ரோஸ் பந்துகளை கண்டு மிரண்டவர்கள் பலர். இந்த போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஆம்ப்ரோஸ். காரணம் அவரது வித்தியாசமான ஹேர்ஸ்டைல். இவர் எல்லாம் அந்த காலத்து ஆள் சங்ககாரா மாதிரியான அதிரடி பேட்ஸ்மேன்கள் அடித்து நொருக்கி விடுவார்கள் என்ற நிலையில் மைக்கேல் வாகனை டக் அவுட்டாக்கி தன்னை இப்போதும் கில்லி என சொல்லி அடித்தார் ஆம்ப்ரோஸ்.


5.அக்தர் - ஹெய்டன் ஸ்லெட்ஜிங்!

கிரிக்கெட் - ஸ்லெட்ஜிங் இரண்டையும் தவிர்க்கவே முடியாது அதிலும் அக்தர் இந்த பெயரை கேட்டாலே பெரும்பாலும் ஸ்லெட்ஜிங் தான் நினைவுக்கு வரும். ஆல் ஸ்டார் கிரிக்கெட்டையும் ஸ்லெட்ஜிங் விட்டு வைக்கவில்லை. ஆனால் இந்த முறை கோபம், ஆக்ரோஷம் எதுவும் இல்லாத ஜாலியான ஸ்லெட்ஜிங் தான் காணப்பட்டது. அக்தர் பந்தை சிக்சருக்கு விரட்டுவேன் என்று ஹெய்டனும், ஹெய்டனை அவுட்டாக்கி துள்ளி குதிப்பேன் என அக்தரும் கூறி ஜாலியாக வசைபாட இருவருமே சொன்னதை செய்தார்கள். ஸ்லெட்ஜிங் புலியான சைமண்ட்ஸ் பந்து வீசும் போது ஹெல்மெட் போடாமல் ஆடி வெறுப்பேற்றிய அக்தருக்கு  பவுன்ஸர் வீசி ஹெல்மெட்டை மாட்ட வைத்து கிலி காட்டினார் சைமண்ட்ஸ்.

6.மெக்ராத்-அக்ரம்-டொனால்டு!

இப்போது 10-15 வயதில் இருக்கும் சிறுவர்களுக்கெல்லாம் இன்றைய வேகப்பந்து வீச்சாளர்கள் என்றால் ஸ்டார்க், ஸ்டெயின், இஷாந்த் என கூறுபவர்களிடம் மெக்ராத், அக்ரம், டொனால்டு பந்து வீசி பார்த்திருக்கிறீர்களா என்றால் யூ-ட்யூபில் தேடுவார்கள் ஆனால் அவர்கள் நேரில் பந்து வீசிவதை மீண்டும் பார்க்க வைத்த பெருமை ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டையே சாரும்.

7.சூப்பர் சிங்கர் சேவாக்!

சர்வதேச போட்டிகளில் ஆடும் போதே சேட்டைகளுக்கு பேர் போனவர் சேவாக் ஆல் ஸ்டார் கிரிக்கெட்டிலும் சேவாக் சேட்டை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. அக்ரம், டொனால்டு எதிரணியில்  பந்து வீசுகிறார்கள் என்றெல்லாம் கவலைப்படாமல் ஹிந்தி பாட்டை சத்தமாக பாடிக்கொண்டே கிரிக்கெட் ஆடி சிக்ஸர்களை பறக்க விட்டார் சேவாக்.

 

Virender Sehwag - SIX!!! Flicked over square leg. Sachin Blasters 48/0 in 3 Overs.

Posted by Cricket All Stars on 14 November 2015


8.மிஸ்டர் சின்சியர்ஸ் சங்ககாரா - பாண்டிங்!

இந்த போட்டியில் அனைவருமே நட்போடு ஆடுகிறார்கள், வெற்றி தோல்வி பெரிதல்ல கிரிக்கெட் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என அனைவரும் கூறினாலும், போட்டி என்று வந்து விட்டால் சங்ககாராவும், பாண்டிங்கும் சீரியஸ் சீனியர்கள் என்பதை நிரூபிக்க தவறவில்லை, கடைசி இரண்டு போட்டிகளிலும் அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற பாண்டிங், மூன்று போட்டிகளிலும் அனல் பறக்க பேட்டிங் செய்து தொடர் நாயகன் விருது வென்ற சங்ககாரா இருவரும் சின்சியர் சீனியர்கள் என்பதை மீண்டும் பதிவு செய்தனர்.

 

Congrats to the man of the series Kumar Sangakkara!! #cricketallstars

Posted by Cricket All Stars on 14 November 2015

 

9.ஆஸம் அமெரிக்க ரசிகர்கள்!

 முதல் இரண்டு போட்டிகளில் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிந்தனர் ரசிகர்கள். முதல் இரண்டு போட்டிகளிலும் சச்சின் அணி தோற்றதால் மூன்றாவது போட்டிக்கு மவுசு குறையுமோ என்று நினைத்தவர்களின் யூகத்தை பொய்யாக்கி கடைசி போட்டியில் தங்களுக்கு பிடித்த வீரரின் படங்களோடு ஆராவாரம் செய்தனர். கங்குலி கடைசி போட்டியில் அரைசதம் அடித்த போதெல்லாம் 2-3 நிமிடங்களுக்கு சத்தம் ஓயவே இல்லை.

 

Sourav Ganguly - SIX!!! lofted over long on. Thats 200 for sachin blasters. 203/3 in 18.4 Overs.

Posted by Cricket All Stars on 14 November 2015

 

10. ஆல் ஸ்டார் செல்ஃபி!

போட்டி முடிந்து அக்தர் எடுத்த ஆல்ஸ்டார் செல்ஃபி இன்று இணையத்தை கலக்கும் வைரல் செல்ஃபி ஆனது. இவ்வளவு ஸ்டார்களையும் ஒரே ஃப்ரேமில் பார்ப்பது அரிது என்றாலும். வார்னே போட்டி முடிந்ததும் அனைவரும் நானும், சச்சினும் நன்றி கூறி கொள்கிறோம். அடுத்த வருடம் வரை காத்திருங்கள் மீண்டும் உங்கள் அனைத்து ஸ்டார்களின் ஆட்டத்தை காண எனக்கூறி இரண்டாவது சீஸனுக்கு என்ட்ரி காட்டினார்.

 

Thanks to all the fans who came out to support us in NY, Houston & LA!! #cricketallstars

Posted by Cricket All Stars on 14 November 2015


11.நம்பர் கேம்!

 டி20 என்றாலே சிக்சர்கள், ஃபோர்களுக்கு பஞ்சமிருக்காது. மூன்று போட்டிகளில் மொத்தம் 88 சிக்சர்கள், 73 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. அதிகபட்சமாக சங்ககாரா 153 ரன்களும் , பாண்டிங் 132 ரன்களும் குவித்தனர். அதிகபட்சமாக சைமண்ட்ஸ் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மைதானம் சிறியது ஃபேஸ்பால் மைதானம் என்றாலும் ஓய்வு பெற்ற இவர்கள் மீண்டும் பேட் பிடித்து 200 ரன்களையெல்லாம் அசால்ட்டாக சேஸ் செய்தது அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது. அடுத்த வருடம் யார் யாரெல்லாம் இணைகிறார்கள். யாரெல்லாம் பைபை சொல்கிறார்கள் என பார்ப்போம்.

ச.ஸ்ரீராம்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close