Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி மிட்செல் ஸ்டார்க் சாதனை!

ஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முறையாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார்.

பெர்த் நகரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் அவர் இத்தகைய மைல் கல்லை எட்டினார். 21வது ஓவரில் 4வது பந்தை  ஸ்டார்க் 160.4 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசினார். இந்த யாக்கர் பந்தை நியூசிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெயிலர் எதிர் கொண்டார்.

இதற்கு முன், சர்வதேச அளவில் 4 பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசியுள்ளனர்.

கடந்த 2003ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சாளர்  சோயிப் அக்தர் 160.3 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசியுள்ளார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பிரெட் லீயும் ஷான் டெயிட்டும் தலா 160.1 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசியுள்ளனர். மற்றொரு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜெப் தாம்ப்சன் மணிக்கு 160.6 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசியதுதான் அதிகபட்ச சாதனையாக இருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close