Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'யூரோவை ரத்து செய்தால், தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும்'- ஃபிரான்ஸ் கருத்து

ஃபிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியை ரத்து செய்தால் அது தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும் என்று போட்டியை நடத்தும் குழு கருத்து தெரிவித்துள்ளது.

ஃபிரான்ஸில் அடுத்த ஜுன் 10 முதல் ஜுலை 10-ம் தேதி வரை, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டிக்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தலைநகர் பாரிஸில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ், பார்க் டி பிரின்ஸஸ் , மைதானங்களிலும்  மார்செலி, லில்லி,போர்டியாக்ஸ், லியோன், நீஸ், லென்ஸ் உள்ளிட்ட நகரங்களில்  என மொத்தம்  10 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் பாரிஸ் நகரத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் குறி வைத்து தாக்கி வருவதால், ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. கடந்த ஜனவரி மாதம் கார்ட்டூன் பத்திரிகையான 'சார்லி ஹெப்டோ' மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த பத்திரிகையின் ஆசிரியர் உள்பட 10 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த துர்சம்பவத்தில் இருந்து மீண்டு வந்த சார்லி ஹெப்டோ பத்திரிகை,  தனது பழைய அலுவலகத்தை மூடி விட்டது. இந்த அலுவலகம் சனிக்கிழமையன்று 29 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட படாகிளான் அரங்கத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. தற்போது அது செயல்பட்டு வரும் அலுவலகம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பை விட உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.
 

பாரிஸில் சார்லி ஹெப்டோ  மீது தாக்குதல் நடந்து 10 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் கடந்த சனிக்கிழமை  தொடர் தாக்குதலில் 132 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் ஐரோப்பிய கோப்பையின் இறுதி ஆட்டம் நடைபெறும் 'ஸ்டேட் டிபிரான்ஸ்' மைதானமும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் குறி வைக்கப்பட்டுள்ளது போட்டியை நடத்தும் யூஃபாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் ஸ்டேடியத்தில் நடத்தப்பட்டிருந்தால், அதற்கு பின், பல ஆண்டுகள் பிரான்சில் சர்வதேச கால்பந்து போட்டிகளை நடத்தவும் ஃபிபா தடை விதித்திருக்கும்.

இத்தகைய சூழலில்,போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றுவதற்கு ஃபிரான்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஃபிரான்ஸில் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து போட்டி அமைப்புக்குழுவின் தலைமை நிர்வாகி ஜேக்யூஸ் லேம்பர்ட் கூறுகையில், ''உலகக்கோப்பைத் தொடருக்கு  பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஐரோப்பிய கால்பந்தாட்ட  கோப்பை போட்டிகள். எனவே திட்டமிட்டபடி பலத்த பாதுகாப்புடன் போட்டி நடைபெறும். ஃபிரான்ஸில் இருந்து வேறு நாட்டுக்கு போட்டியை மாற்றினால், அது தீவிரவாதிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அமைந்து விடும்''என்றார்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ