Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹாசிம் ஆம்லாவிடம் விருது பெற்ற இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் நரபலி!

தென்ஆப்ரிக்காவில் மன வளர்ச்சி குன்றிய இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் ஒருவர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட வீரரின் பெயர் பெயர் நவாஸ் கான் (வயது 23). இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட  இவர், உம்ஸிண்டோ என்ற நகரில் தாயுடன் வசித்து வந்தார்.  இவரது நெருங்கிய நண்பர் தண்டோக்வேக் டுமா. இவர் உள்ளூர் மந்திரவாதி ஒருவரை தனது சொந்த பிரச்னைகள் தொடர்பாக சந்தித்துள்ளார். அதற்கு, அந்த மந்திரவாதி ஒருவரது தலையை வெட்டி எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து தண்டோக்வேக் டுமா, மன வளர்ச்சி குன்றிய நவாஸ் கான் தலையை வெட்டி எடுத்து கொண்டு சென்றுள்ளார். இந்த கொடூரச் செயலை செய்ய, தனது நண்பர் இருவரையும் கூட்டு சேர்த்துக் கொண்டார். பின்னர் நவாஸ் கானை ஒரு புதர் பகுதிக்கு அழைத்து சென்று கத்தியால் அவரது தலையை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். சில நாட்களுக்கு பிறகுதான் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தென்ஆப்ரிக்க மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய டுமா உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். போலீஸாரிடம் டுமா அளித்த வாக்குமூலத்தில், "மந்திரவாதிதான் எனது பிரச்னைகள் தீர நரபலி கொடுக்க வேண்டும் என்றும்,  துண்டித்த தலையுடன் பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறினார். இதனால்தான் நவாஸ் கானை கொலை செய்தோம்" என தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட நவாஸ் கான், கடந்த  2013-ம் ஆண்டில் சிறந்த அறிவார்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் என்ற விருதை, தென்ஆப்ரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் ஹாசிம் ஆம்லாவிடம் இருந்து பெற்றவர். நவாஸ் கான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ