Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாதனை படைத்த ராஸ் டெய்லரை பாராட்ட மனமில்லாத ஆஸ்திரேலிய வீரர்கள் !

ண்மையில் பெர்த் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் , நியூசிலாந்து வீரர் ராஸ்டெய்லர் 290 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய மண்ணில், வெளிநாட்டு வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான்.

ஆனால் ராஸ் டெய்லர், மைதானத்தில் இந்த சாதனையை படைத்த போது, அவரை பாராட்டி ஒரு ஆஸ்திரேலிய வீரர் கூட கைகொடுக்க முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தின் வர்ணணையாளரும் முன்னாள் வீரருமான டர்க் நேனஸ்,  தனது வர்ணணையின் போதே குறை கூறி விட்டார்.

'' ஒரு வீரர் ஒரு சாதனை படைக்கிறார். அந்த சமயத்தில் எதிரணியை சேர்ந்த ஒருவர் கூட டெய்லரிடம் சென்று பாராட்டி கை குலுக்க முன்வரவில்லை. இது எந்தவிதமான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் என்று தெரியவில்லை. குழந்தைகளுக்கு நாம் நன்றி தெரிவிக்க, பாராட்ட கற்றுக் கொடுக்கிறோம். மைதானத்திலும் அதனை கடைப்பிடிக்க வேண்டும்'' எனக் கூறினார் டர்க் நேனஸ்.

நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் கிரேட்பேட்ச், ''ஆஸ்திரேலியர்கள் எப்போதுமே அராஜகமாக நடந்து கொள்பவர்கள், இது அவமானகரமான செயல் '' என்றார். இதே போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் முதல் இன்னிங்சில் 253 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து வீரர்கள் வார்னரை பாராட்டத் தவறவில்லை.

இது குறித்து ராஸ் டெய்லர் கூறுகையில், “ என்னை கேட்ச் பிடித்து அவுட் செய்த நாதன் லயனை பாராட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் சென்றனர். நான் வேறு பகுதியில் இருந்து பெவிலியன் திரும்பினேன். தற்செயலாக நடந்து விட்டது '' என்றார்.

இந்த குற்றச்சாட்டினையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லேமென்,  ராஸ்டெய்லரை சந்தித்து கைகுலுக்கி, தனது பாராட்டினை தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close