Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

30 பந்துகளில் அரைசதம்; அடுத்த 16 பந்துகளில் சதமடித்த ஜாஸ் பட்லர்!

க்கிய அரபு எமிரேட்சில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 4வது கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 355 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 271 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர், 116 ரன்கள் எடுத்தார். அதோடு  46 பந்துகளில் சதமடித்து பல்வேறு புதிய சாதனைகளையும் படைத்துள்ளார்.

இந்த போட்டியில் 30 பந்துகளில் அரை சதமடித்த ஜாஸ் பட்லர், அடுத்த 16 பந்துகளில் 100 ரன்களை அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஒருவரால் அதி விரைவாக அடிக்கப்பட்ட சதம் இதுவாகும்.

மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட முதல் மின்னல் வேக சதமும் இது. அதோடு அமீரக மண்ணில் மிக விரைவாக அடிக்கப்பட்ட சதமும் கூட.

70 பந்துகளுக்குள் ஜாஸ் பட்லர் 3 முறை சதமடித்துள்ளார். இந்த சாதனையை படைத்த 5வது வீரர் ஜாஸ் பட்லர்.

25வது ஓவருக்கு பிறகு களமிறங்கி சதமடித்த 3வது வீரர் ஜாஸ் பட்லர்.  டிவில்லியர்ஸ் 5 முறையும் விராட் கோலி இரு முறையும் இது போன்று சதமடித்துள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 30வது ஓவருக்கு பிறகு களமிறங்கி அடிக்கப்பட்ட 4வது சதம் இதுவாகும்.  இதற்கு முன் டி வில்லியர்ஸ் இரு முறையும் மேக்ஸ்வெல் ஒரு முறையும் இத்தகைய சாதனையை படைத்துள்ளனர்.

இந்த போட்டியில் ஜாஸ் பட்லரின் ஸ்ட்ரைக் ரேட் 223.7. இங்கிலாந்து வீரர் ஒருவரின் அதிகபட்ச ஒருநாள் ஸ்ட்ரைக் ரேட் இது.

இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் 8 சிக்சர்களை விளாசினார். இதற்கு முன் கடந்த 2004-ம் ஆண்டு பிளின்டாப் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 7 சிக்சர்கள் அடித்ததே, ஒரே போட்டியில் இங்கிலாந்து வீரர் ஒருவரால் அடிக்கப்பட்டஅதிக எண்ணிக்கையிலான சிக்சர்களாக இருந்தது.

ஒருநாள் போட்டியில் 3 சதங்கள் அடித்த 14வது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர். மற்றொரு இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஸ்டூவர்ட், 3 அல்லது அதற்கு மேல் சதமடித்துள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ