Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சொந்த மைதானத்தில் பார்சிலோனாவிடம் 4 கோல்கள் வாங்கி ரியல்மாட்ரிட் படுதோல்வி

ஸ்பானீஷ் லீக் கால்பந்து தொடரில் நேற்று இரவு நடைபெற்ற எல்கிளாசிகோ மோதலில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை தோற்கடித்தது.

மாட்ரிட் நகரில்  ரியல்மாட்ரிட் அணிக்கு சொந்தமான சான்டியாகோ பெர்னாபூ மைதானத்தில் 85 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இந்த ஆட்டம் நடைபெற்றது. ரியல்மாட்ரிட் அணியின் கரீம் பென்ஜமா,ஜேம்ஸ் ரோட்ரிகஸ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். பார்சிலோனா அணியின் காயம் காரணமாக லயனல் மெஸ்சி இடம் பெறவில்லை. சவுரஸ் தலைமையில் பார்சிலோனாவின் முன்களம் ஆடியது.

முதல் பாதியில் 11வது நிமிடத்தில் நெய்மர் கொடுத்த பாசை பயன்படுத்தி சவுரஸ் முதல் கோலை அடித்தார். அடுத்து 39வது நிமிடத்தில் இனியஸ்டா கொடுத்த பாஸ் நெய்மர் கோல் அடித்த உதவியாக இருந்தது. முதல் பாதியில் பார்சிலோனா அணி 2 கோல்கள் முன்னிலை பெற்றது.

பிற்பாதியில் 52வது நிமிடத்தில் பெனால்டி ஏரியாவுக்குள் நெய்மர் தட்டி கொடுத்த பந்தை மின்னல் வேகத்தில் இனியஸ்டா கோலுக்குள் அடித்தார். தொடர்ந்து 74வது நிமிடத்தில் சவுரஸ் தனது 2வது கோலை அடிக்க,  பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஸ்பானீஷ் லீக்கில் பார்சிலோனா 30 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ரியல்மாட்ரிட் 24 புள்ளிகளுடன் 2வது இடத்தில் தொடர்கிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close