Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெண்டோசா ஹாட்ரிக் கோல்: ஐ.எஸ்.எல். தொடரில் மீண்டெழுந்தது சென்னை!

ந்தியன் சூப்பர் லீக் தொடரில்,  சென்னை அணி கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி,  தனது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சென்னை அணியின் மெண்டோசா ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார்.

தொடரை வெல்லும் அணி என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை,  தொடக்க  ஆட்டங்களில் பெரிதும் சொதப்பியது. கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து, கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டதோடு, ஒரு கட்டத்தில் அரை இறுதி வாய்ப்பை இழந்து விடும் நிலைமைக்கும் சென்றது.

இந்நிலையில் சென்னை அணி, தனது வாழ்வா சாவா ஆட்டத்தில் கேரள அணியை துவம்சம் செய்து அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இந்த ஆட்டத்தில்,  சென்னை அணியின் கேப்டன் எலானே களம் காணவில்லை.

ஆனாலும் ஆட்டத்தின் மூன்றாவது  நிமிடத்திலேயே சென்னை அணி  கோலடித்து அசத்தியது . தடுப்பாட்டக்காரரான தனபால், அற்புதமாக கோலடித்து கணக்கை துவக்கி வைத்தார். பின்னர் 16வது நிமிடத்தில் தனபால் கொடுத்த பாஸை அணியின் நட்சத்திர வீரர் மெண்டோசா கோலாக்கினார்.

உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணியின் கேப்டன் ஜிடேனிடம் சண்டை போட்ட சென்னை அணியின் பயிற்சியாளர் மெட்ரசிமார்கோ மெட்ரசி, இந்த ஆட்டத்தில் கேரள அணி வீரர் சவுமிக்குடன் மோதலில் ஈடுபட்டார். பின்னர் நடுவரும் மற்ற வீரர்களும் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர்.

தொடர்ந்து ஆட்டத்தின் 80 மற்றும் 81வது நிமிடங்களில் மெண்டோசா மேலும் இரு கோல்கள் அடித்தார். ஐ.எஸ்.எல் தொடரில் மெண்டோசா அடிக்கும் 2வது ஹாட்ரிக் கோல் இதுவாகும். நடப்புத் தொடரில் இதுவரை மொத்தம் 9 கோல்கள் அடித்தும் மெண்டோசா முதலிடத்தில் உள்ளார்.

ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், கேரள அணியின் ஆன்டோனியோ ஜெர்மன் ஆறுதல் கோலடிக்க, இறுதியில் சென்னை அணி 4-1 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 11 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் அரை இறுதி வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

கிரிக்கெட்டாய் இருந்தால் என்ன, கால்பந்தாய் இருந்தால் என்ன..சென்னை அணிக்கு விசில் போடுவோம்!

-மு.பிரதீப் கிருஷ்ணா


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close