Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளிநாட்டுக்கு கிரிக்கெட் வீரர்கள் ஏற்றுமதியை தொடங்கியது சீனா!

விளையாட்டுத்துறையில் சீனா கொடி கட்டி பறக்கும் நாடு. ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிகளில் சீனாவின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருக்கும். ஜிம்னாஸ்டிக் , பளுதூக்குதல் போன்ற பிரிவுகளில் சீன வீரர்- வீராங்கனைகளை அடித்துக் கொள்ள முடியாது. ஆனால் அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடையாது.
 

இந்தியாவின் அண்டைநாடாக இருந்த போதிலும், சீனர்கள் கால்பந்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கிரிக்கெட்டுக்கு கொடுப்பது இல்லை.  ஹாங்காங் உள்ளிட்ட சில நகரங்களில் கிரிக்கெட் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது உண்டு.

அந்த வகையில் முதல்முறையாக சீனாவை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர்,   ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹாங்காங் அணிக்காக விளையாடிய 24 வயது  மிங் லீ என்ற சுழற்பந்து வீச்சாளரை சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. சீனாவை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர்,  பிக் பேஷ் தொடரில் விளையாடவுள்ளது இதுவே முதல் முறை.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்தி வரும் மிங் லீ, 2010-ம் ஆண்டு ஹாங்காங் அணிக்காக விளையாடினார். லெக்ஸ்பின்னரான இவர்,  வார்னேயின் தீவிர ரசிகர். அவரது பந்துவீச்சை யூ டியூப்பில் பார்த்து திறமையை வளர்த்துக் கொண்டதாக மிங் லீ தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது குறித்த மகிழ்ச்சியடைந்துள்ள மிங்லீ, ''இது தனது  திறமையை மேலும் வளர்த்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் '' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ