Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஸ்வின், ஜடேஜா சுழலில் 79 ரன்னில் சுருண்டது தென் ஆப்ரிக்கா!

நாக்பூரில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் சுழல் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தென் ஆப்ரிக்கா அணி, முதல் இன்னிங்சில் 79 ரன்னுக்கு சுருண்டது.
 

டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 215 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக முரளி விஜய் 40 ரன்கள் எடுத்தார். தென் ஆப்ரிக்கா தரப்பில் ஹார்மீர் 4 விக்கெட்டுகளையும், மோர்கல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
,
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்கா அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் எடுத்திருந்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் 7 ரன்னில் இருந்த எல்கார் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து கேப்டன் ஆம்லா (1), டி வில்லியர்ஸ் டக் அவுட் ஆனார்கள்.

அந்த அணியில் அதிகபட்சமாக டூமினி 35 ரன்கள் எடுத்தார். அதன் பின் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். இதனால் தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 79 ரன்களுக்கு சுருண்டது. அஸ்வின் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டும், ஜடேஜா 4 விக்கெட்டும் கைப்பற்றினர். மிஸ்ரா ஒரு விக்கெட்டும் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து தென் ஆப்ரிக்கா அணி, 136 ரன்கள் பின்னடைந்துள்ளது.  இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ