Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தென் ஆப்ரிக்காவின் 9 ஆண்டு தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா!

நாக்பூரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. 11 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி, தென் ஆப்ரிக்கா அணியை தோற்கடித்துள்ளது.
 

இந்திய அணி முதல் இன்னிங்சில் 215 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முரளி விஜய் 40 ரன்கள் எடுத்தார். தென் ஆப்ரிக்கா தரப்பில் ஹார்மீர் 4 விக்கெட்டும், மோர்கல் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்கா அணி 79 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்டும், ஜடேஜா 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

136 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தென் ஆப்ரிக்கா வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இந்திய அணி 173 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது.

இதைத் தொடர்ந்து 309 ரன்கள் வெற்றி இலக்காக தென் ஆப்ரிக்கா அணிக்கு இந்திய அணி நிர்ணயித்தது. இதையடுத்து, களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி அஸ்வின் சுழலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 185 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அம்லா, டு பிலெசிஸ் தலா 39  ரன்கள் எடுத்தனர். அஸ்வின் 7 விக்கெட்டும், மிஸ்ரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

11 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி, தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது தென் ஆப்ரிக்கா அணி.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ