Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

5 நாட்கள் ஆட்டம் 3 நாட்களில் முடிவதால், ஸ்டார் இந்தியாவுக்கு ரூ. 80 கோடி இழப்பு

கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்த இந்தியாவில் அதுவும் உள்நாட்டில் நடக்கும் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பி, ஸ்டார் இந்தியா தொலைகாட்சி ரூ.80 கோடி வரை இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது.

தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மொகாலி டெஸ்ட் 3 நாட்களில் இந்தியா வெற்றி பெற்று விட, பெங்களுர் டெஸ்ட் மழையால் 4 நாட்கள் ஆட்டமும் கைவிடப்பட்டு சமனில் முடிந்தது. நாக்பூர் ஆடுகளமும் சுழற்பந்துக்கு சாதகமாக அமைக்கப்பட,  தென்ஆப்ரிக்க அணி சுருண்டு விழுந்தது. இந்த ஆட்டமும் 3 நாட்களில் முடிந்து விட, இந்தியா மீண்டும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

தென்ஆப்ரிக்க அணியின் மோசமான ஆட்டம் காரணமாக 5 நாட்கள் ஆட வேண்டிய டெஸ்ட் போட்டிகள் 3 நாட்களில் முடிந்து விட்டதாலும் பெங்களுரு டெஸ்ட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதாலும் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை பெற்ற ஸ்டார் இந்தியா ரூ.80 கோடி வரை இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. கிட்டத்தட்ட 75 மணி நேரம் போட்டி ஒளிபரப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 முதல் 2018ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர்களை ஒளிபரப்ப ஸ்டார் இந்தியா நிறுவனம் மொத்தம் 3 ஆயிரத்து 851 கோடி கொடுத்துள்ளது. ஸ்டார் இந்தியா நிறுவனம்,'' சுழற்பந்துக்கு சாதகமான பிட்சுகள் தயாரிப்பது நல்லதல்ல. இரு தரப்புக்கும் ஏற்ற வகையில் பிட்ச் அமைக்கப்பட வேண்டும். டெல்லி டெஸ்ட் போட்டியாவது 5 நாட்கள் நடைபெறும் ''என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close