Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திண்டுக்கல்லில் ரஞ்சி போட்டி: காயமடைந்த ஆஸ்திரேலிய நடுவரின் உடல்நிலை முன்னேற்றம்!

திண்டுக்கல்லில் நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய நாட்டு நடுவர் ஜான்வாட் காயமடைந்தார். அவருக்கு திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் அருகே நத்தம் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை போட்டியில் பஞ்சாப் தமிழக அணிகள் மோதின. முதல் இன்னிங்ஸின் 49வது ஓவரில் தமிழக வீரர் சந்திரசேகர் வீசிய பந்தை பஞ்சாப் வீரர் ராஜ்வீந்தர் சிங் அடித்தார். அது நடுவர் ஜான்வாட்டின் கழுத்து பகுதியில் படவே ஜான் மயங்கி விழுந்தார்.

உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஜான் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  நலமாக உள்ளார்.



-சு. அருண் பிரசாத்

புகைப்படங்கள் : வீ. சிவக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ