Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.பி.எல். அணியை வாங்கும் முயற்சியில் செட்டிநாடு சிமெண்ட்!

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், அந்த அணிகள் 2 சீசன்களில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சீசனுக்கு மேலும் 2 ஐ.பி.எல். அணிகளை உருவாக்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த அணிகள் எந்த நகரை மையமாக வைத்து உருவாக்கப்பட வேண்டுமென்பதில் இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இதற்கிடையே புதிய அணிகளை வாங்குவதற்கு 21 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதில் சென்னையை சேர்ந்த செட்டிநாடு சிமெண்ட் நிறுவனமும் ஒன்று. 50 வருடங்கள் பழமையான இந்த நிறுவனம், அனேகமாக சென்னையை வைத்து அணி உருவாக்கப்பட்டால், புதிய அணியை வாங்கி விடவேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

அதேபோல் சைக்கிள் பிராண்ட் அகர்பத்தியை உற்பத்தி செய்யும் மைசூரை சேர்ந்த என்.ரங்காராவ் அன்ட் சன்ஸ் நிறுவனமும் புதிய ஐ.பி.எல். அணியை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு கிரிக்கெட் தொடர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்,  அசோசியேட் ஸ்பான்ஷராக இருந்துள்ளது.

அதே போல் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு கிரிக்கெட் தொடர்களை ஒளிபரப்பி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், ஐ.பி.எல். அணியை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஸ்டார் குழுமத்துக்கென்று சொந்தமாக ஐ.பி.எல். அணி இருப்பது, நிறுவன வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என ஸ்டார் குழுமம் கருதுகிறது.



 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ