Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.பி.எல்.: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகள் தேர்வு!

புதுடெல்லி: ஐ.பி.எல். டி20 லீக் தொடரில் விளையாட்டுவதற்கு சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐ.பி.எல். டி20 லீக் தொடர் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தொடரின்போது, மேட்ச் பிக்சிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை, ராஜஸ்தான் அணிகள் இரண்டு ஆண்டுகள் தொடர்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த இரண்டு அணிகளுக்கு பதிலாக வேறு இரு அணிகளை தேர்ந்தெடுக்க டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் இன்று (8-ம் தேதி) திறக்கப்பட்டது.

இதில், புனே என்ற அணியை நடத்துவதற்கான உரிமையை தொழிலதிபர் சஞ்சீவ் கோயன்காவின் நியூ ரைசிங் நிறுவனமும், ராஜ்கோட் என்ற அணியை இன்டெக்ஸ் என்ற செல்போன் தயாரிப்பு நிறுவனமும் வாங்கியுள்ளது.

புனே அணிக்கான உரிமத்தை வாங்குவதற்காக நியூ ரைசிங் நிறுவனம் மைனஸ் 16 கோடி ரூபாய் ஏலம் கேட்டது. இதனால், அந்த நிறுவனம் பி.சி.சி.ஐ.க்கு ரூ.16 கோடி வழங்க வேண்டும். இதேபோல், ராஜ்கோட் அணிக்காக இன்டெக்ஸ் நிறுவனம் மைனஸ் 10 கோடி ரூபாய் ஏலம் கேட்டது. இதனால் இந்த நிறுவனம் ரூ.10 கோடியை பி.சி.சி.ஐ.க்கு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close