Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யூரோ 2016 : போட்டி அட்டவணை வெளியீடு

பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும்  போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணி ருமேனியாவை எதிர்கொள்கிறது.

அட்டவணைக்கு  க்ளிக் செய்க...

இது வரையில் 16 அணிகள் மட்டுமே பங்கு பெற்று வந்த இந்த தொடரில் முதல் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டியில் இடம் பெற்றுள்ள 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவுக்கு 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஜுலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் அரையிறுதி போட்டிகளும் ஜுலை 10ஆம் தேதி இறுதிபோட்டியும் நடைபெறுகிறது.

இந்த தொடரில் ஏ பிரிவில் பிரான்ஸ், ருமேனியா, அல்பேனியா, சுவிட்சர்லாந்து அணிகளும் பி பிரிவில் இங்கிலாந்து, ரஷ்யா, ஸ்லோவேகியா, வேல்ஸ் அணிகளும் சி பிரிவில் ஜெர்மனி, நெதர்லாந்து , போலந்து , உக்ரேன் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

டி பிரிவில் குரோஷியா, துருக்கி, செக் குடியரசு, ஸ்பெயின் அணிகளும் ஈ பிரிவில் இத்தாலி, பெல்ஜியம், வடக்கு அயர்லாந்து, ஸ்வீடன் அணிகளும் எப் பிரிவில் ஆஸ்திரியா, ஹங்கேரி, ஐஸ்லாந்து, போர்ச்சுகல் அணிகளும் உள்ளன. 


 

எடிட்டர் சாய்ஸ்