Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சைக்கிளிங்கில் சாதிக்கும் யுவதி...!

முதல்முதலாக உலக சைக்கிளிங் பந்தய தரவரிசையில், நான்காவது இடம் பிடித்திருக்கிறார் ஒரு இந்திய வீராங்கனை. அவர் டெபோரா ஹெரால்ட். அந்தமான் நிக்கோபார் தீவை சேர்ந்த, 20 வயதாகும் டெபோரா, 9 வயதாக இருக்கும்போது சுனாமி ஆபத்தில் இருந்து தப்பித்து வந்தவர். நேற்று சர்வதேச சைக்கிளிங் யூனியன் வெளியிட்ட, தரவரிசைப்பட்டியலில் 211 புள்ளிகளுடன், 500 மீட்டர் டைம் ட்ரையல் பிரிவில், நான்காம் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார்.

10வது இடத்தில் இருந்த டெபோரா, கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில், ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப்பதக்கம் வெல்ல, 6 இடங்கள் முன்னேறி நான்காவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். இதனால் இந்திய அணியும், 500 மீ டைம் ட்ரையல் பிரிவில் 11 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

"முதல் இந்தியராக இந்த இடத்தை அடைந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் வருங்காலங்களில் நான் இன்னும் முன்னேற விரும்புகிறேன்.  உலகத் தரவரிசையில் முதலிடத்தை அடைய வேண்டும் என்பதே இலக்கு. என்னை ஊக்குவித்து,  உதவிகள் அளித்து வரும் இந்திய அரசுக்கும், இந்திய சைக்கிளிங் கூட்டமைப்புக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த வருடம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள, தகுதி பெறுவதற்காக கடினமாக உழைப்பேன்” என்கிறார் டெபோரா.

வாழ்த்துக்கள் தோழி...!
 
-ஞா.சுதாகர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close