Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.பி.எல். 2016: வரைவு பட்டியலில் தோனி, அஸ்வின் , மெக்கல்லம்

ரும் 2016-ம் ஆண்டுக்கான ஜ.பி.எல். தொடரில் விளையாட ராஜ்கோட்,  புனே அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.  தடை விதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளில் இருந்து   தலா 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்து  கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.  இதர வீரர்களை ஏலம் மூலம் எடுத்துக் கொள்ளலாம்.வீரர்கள் தேர்வு நாளை மும்பையில் நடக்கிறது.  வரும் பிப்ரவரி 6-ம் தேதி புதிய வீரர்களுக்கான ஏலம் விடப்படுகிறது.

ஐ.பி.எல். வெளியிட்டுள்ள வரும் 2016-ம் ஆண்டுக்கான  வரைவு பட்டியலில் சென்னை அணியின் கேப்டன் தோனி, அஸ்வின், சுரேஷ் ரெய்னா, பிரன்டென் மெக்கல்லம்,  ட்வைன் பிராவோ மற்றும்  ரவீந்தர ஜடேஜா, இர்ஃபான் பதான், அஜிங்கிய ரஹானே, சஞ்சு சாம்ப்சன், கருண் நாயர், பவான் நெகி, ஸ்டீவன் ஸ்மித், டிம் சவுத்தி, ஷேன் வாட்சன்  உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வரைவு பட்டியலில் இருந்து நேரடியாக தேர்வு செய்யப்படும் முதல் ஐந்து வீரர்களில் முதல் வீரருக்கு ரூ. 12.5 கோடி சம்பளமாக வழங்கப்படும். அடுத்த நிலை வீரர்களுக்கு 9.5, 7.5, 5.5, 4 கோடி ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதோடு டிரேடிங் வின்டோ டிசம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் வீரர்களை,  அணிகள் விடுவித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close